Chennai Weather Report, Depression in Bay of Bengal:
தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், வருகிற 29-ம் தேதி புயல் உருவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் இன்று (ஏப்ரல் 23) செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘வங்கக்கடலில் 29ம் தேதி புயல் உருவாகும். 29ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’ இருப்பதாக கூறினார்.
Depression in bay of bengal: சென்னை வானிலை அறிக்கை
weather at chennai: வங்கக்கடலில் 29ம் தேதி புயல் உருவாகும்.
மேலும், ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இது மேலும் வலுவடைந்து 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அடுத்த 24 மணி நேரத்தில் உள் தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது’ என்றார் அவர்.
ஏற்கனவே கடந்த ஓரிரு தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிவது குறிப்பிடத்தக்கது.