/tamil-ie/media/media_files/uploads/2017/11/cyclone-vardah-750.jpg)
today chennai weather forecast : 8 லட்சம் பேர் வெளியேற்றம்
Chennai Weather And Fani Cyclone: சென்னையில் ஃபனி புயல் காரணமாக எந்த அளவுக்கு மழை இருக்கும்? இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவல்களை இங்கு காணலாம்.
இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை மண்டல அலுவலகம் சார்பில் இன்று (ஏப்ரல் 27) பிற்பகல் 1 மணிக்கு வெளியிட்ட தகவல்களில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 27, 28, 29 தேதிகளில் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். 30-ம் தேதி தமிழ்நாட்டின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழியும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/04/weather-photo-image-1-300x185.jpg)
Fani Cyclone May Hit Chennai, North Tamil Nadu: தமிழ்நாடு வானிலை
ஏப்ரல் 30-ம் தேதி இடி-மின்னல் மற்றும் 40 முதல் 50 கி.மீ வரையிலான காற்று குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும். மே 1-ம் தேதியும் அதே சூழல் இருக்கிறது.
ஏப்ரல் 30-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். வெப்ப நிலை குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
Read More: Fani Cyclone பயணிக்கும் பாதை தெரியுமா? ஏப். 30, மே 1 தேதிகளில் அதி தீவிர புயல்
குறிப்பு: ஃபனி என்கிற பெயரை இந்தப் புயலுக்கு வங்க தேசம் சூட்டியது. Fani என்றால் தமிழில், ‘ஆபத்தானது’ என்று அர்த்தம். ஆனாலும் இந்தப் புயல், ஆபத்தை தராமல், மழையை மட்டும் தரும் என நம்புவோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.