தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (மே 13) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பொழிய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலையும் தெரிவித்தது.
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் மே 11ம் தேதி இரவு 9மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ என்ற அளவில் இருக்கும். 14ம் தேதி, தமிழகத்தின் பலபகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
Read More: Chennai Weather: இன்று மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள் இவைதான்...
சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மழைப்பதிவு
மே 12ம் தேதி காலை 8.30 மணிநிலவரப்படி
கோத்தகிரியில் 7 செ.மீ
கூடலூரில் 4 செ.மீ
பெரியநாயக்கன்பாளையம் 3 செ.மீ
ஊட்டி, சேரன்மாதேவி, பேச்சிப்பாறை 2 செ.மீ
தளி, கேத்தி, நடுவட்டம், சூளகிரி பகுதிகளில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மே 12 பகல் 1 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை
இன்று ( மே 12) மற்றும் நாளை ( 13ம் தேதி) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.