Chennai Weather Forecast: இலங்கை மற்றும் அதனுடன் இணைந்த தென்மேற்கு விரிகுடா விரிகுடா வரை புயல் உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கரையோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேலும் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதோடு, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் குறிப்பிட்ட இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் ரவா ரோஸ்ட்!
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு நெருக்கமாக இருக்கும் பகுதிகளில், ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி தான் இதற்குக் காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு நவம்பர் 4-ம் தேதி முதல் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவித்தனர். நவம்பர் 8 ஆம் தேதி வரை இந்த மழை தொடர வாய்ப்புள்ள நிலையில், சமீபத்தில் பிலிப்பைன்ஸை தாக்கிய கோனி சூறாவளியில் எஞ்சியவற்றால், அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.
தனியார் வானிலை பதிவரான தமிழ்நாடு வெதர்மேன் எனும் பிரதீப் ஜான், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவமழை பெய்யக்கூடும் என்றும், கோனியின் எச்சங்கள் மழை தாங்கும் மேகங்களுடன் வரும் போது, நவம்பர் 10-ஆம் தேதி நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தயிர் இருந்தால் போதும்: இட்லி- தோசைக்கு உடனடி சட்னி
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”