Chennai weather latest updates heavy rain alert given 18 districts : இன்று கன்னியாகுமரி, தேனி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
Advertisment
இடியுடன் கூடிய கனமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை வானிலை
Advertisment
Advertisements
சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பல்வேறு இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக டிகிரி 35 செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக மழை பொழிவை பெற்ற இடங்கள்
நேற்று காலையில் சிறிது நேரம் சென்னையில் மழை பெய்த பின்னர் வெயில் வாட்டி வதைக்க துவங்கியது. பின்பு நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சில இடங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மற்றும் தொண்டியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரியின் கோத்தகிரியில் 6 செ.மீ மழையும், கேத்தி பள்ளத்தாக்கில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. திருவள்ளூரின் செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, உதகையின் குன்னூர், கன்னியாகுமரி மற்றும் நெல்லையின் அம்பா சமுத்திரம் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சோழவரம், அரவக்குறிச்சி, மயிலாடுதுறை, ஊத்தங்கரை, மணிமுத்தாறு, நாகர்கோவில், ஒட்டப்பிடாரம், பெருந்துறை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.