வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisment
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், நேற்று (செப்டம்பர் 12ம் தேதி) இரவு 10 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.
இன்று ( செப்டம்பர் 13ம் தேதி) மற்றும் 16ம் தேதி, தமிழகத்தின் நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும். லேசானது முதல் மிதமான மழை சில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.