வட தமிழகத்தில் இன்று கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Weather In Chennai: அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும்.

Tiruchi Boy Falls In Borewell Live Updates :

Chennai weather latest updates heavy rain alert given north TN : இன்று மழைப் பொழிவை பெறும் இடங்களாக அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, நாகை, குமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாலை பல்வேறு இடங்களில் சென்னையில் பலத்த மழை பெய்தது.

சென்னை வானிலை

இன்று சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும்.

நேற்று அதிகபட்சமாக மழைப் பொழிவை பெற்ற இடங்கள்

கோவையின் சின்னக்கல்லாறில் நேற்று மட்டும் சுமார் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரியின் ஜீபஜாரில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை தபால் அலுவலகம், நீலகிரியின் தேவாலா மற்றும் கோவை தாலுகா அலுவலகம் என பல பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சேலம் ஓமலூர், திருநெல்வேலி செங்கோட்டை, நடுவட்டம், மற்றும் ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இல்லாமல் கன்னியாகுமரி, மன்னார்குடி, வலங்கைமான், தம்மப்பட்டி, திருச்செங்கோடு, குளச்சல் ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மாலை பல்வேறு இடங்களில் சென்னையில் பலத்த மழை பெய்தது.

மேலும் படிக்க : திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai weather latest updates heavy rain alert given north tn says chennai regional meteorology department

Next Story
மாவட்ட ஆட்சியர் பணிக்கு ஆட்கள் தேவை! – போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர் கைதுPosters on ‘vacant’ Collector post activist Durai Guna arrested - மாவட்ட ஆட்சியர் பணிக்கு ஆட்கள் தேவை! - போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர் கைது
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com