Chennai weather latest updates heavy rain alert : கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக வட தமிழக பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புகள் இன்று அதிகம் உள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நான்கு மணிக்கு துவங்கி 40 நிமிடங்கள் சென்னையின் நந்தனம், சைதாப்பேட்டை, டி-நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
அதிக மழைப்பொழிவை பெற்ற இடங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வலங்கைமான் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலூர், மாதாவரம், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், சோழவரம், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : இன்றைய வானிலை : மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.எம்.டி… வலுவடைகிறது பருவமழை
30, 31 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், மாலத்தீவு, லட்சத்தீவுப் பகுதிகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இலங்கையின் மன்னார் வளைகுடா அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவாத்ல் எச்சரிக்கை.