Chennai weather latest updates heavy rainfall warning : கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டஙகளில் கனத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை செய்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்.
சென்னை வானிலை
தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிக பட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மழைப்பொழிவை பெற்ற இடங்கள்
கீழச்செறுவாய் (கடலூர் மாவட்டம்) 15 செ.மீ மழையை பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் முறையே 11 செ.மீ மழையும், 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. திருச்சியின் லால்குடி, தஞ்சையின் வல்லம், ராமநாதபுரத்தின் தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காஞ்சியின் செய்யூர், செங்கல்பட்டு, திருச்சியின் சமயபுரம், திருவள்ளூரின் பூண்டி, கடலூரின் தொழுதூர் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கையின் திருப்புவனம், நீலகிரியின் தேவலா, திருச்சி ஏர்போர்ட், விருதுநகர், வேலூரின் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : அரபிக் கடலில் உருவாகும் கியார் புயல்; இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு