Chennai weather latest updates interior Tamil Nadu receives heavy rainfall : இந்த ஒரு வாரம் முழுவதும், சென்னை மக்களை அன்புடன் வந்து எழுப்பிச் செல்கிறது மழை. ஒவ்வொரு நாளும் மழையுடன் விடியும் சென்னை சாலைகள் ஆங்காங்கே நீர் தேங்கி, கொசுக்கள் மொய்க்கும் இடமாக மாறி நோய் தொற்றினை உருவாக்கவும் வகை செய்கிறது. உங்களின் வீடு மற்றும் உங்களின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திடுங்கள்.
திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், காரைக்கால், விழுப்புரம், புதுவை, திருவண்ணாமலை, காஞ்சி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : வேலூரில் வரலாறு காணாத மழை... ஊருக்குள் புகுந்த காற்றாற்று வெள்ளம்
சென்னை வானிலை
வட சென்னையில் நேற்று மாலை முதலே நல்ல மழை பெய்யத் துவங்கியது. அதன்பின்பு மீண்டும் நள்ளிரவில் வடசென்னை மற்றும் மத்திய சென்னையில் நல்ல மழை. இன்று காலை வரை சென்னையில் பதிவான மழையின் அளவு
அம்பத்தூர் - 27
தாமரைப்பாக்கம் - 26
கொரட்டூர் அணைக்கட்டு - 21
சோழவரம் ஏரி - 19
தண்டையார்பேட்டை - 18
பூந்தமல்லி - 15
மெரினா டிஜிபி அலுவலகம் - 13
அயனாவரம் - 10
பெரம்பூர் -10
தரமணி - 10
(அளவீடுகள் மில்லிமீட்டரில்)
சென்னையின் இன்றைய வானிலை : சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
நேற்று அதிக அளவு மழைப்பொழிவை பெற்ற இடங்கள்
திருச்சிராப்பள்ளி - 13 செ.மீ மழை
கிருஷ்ணகிரியின் ராயக்கோட்டை, சேலத்தின் வாழப்பாடி - 8 செ.மீ மழை
திருச்சி லால்குடி, பெரம்பலூர், வேலூர் மெய்ன் - 7 செ.மீ
கிருஷ்ணகிரியின் உத்தங்கரை, பையூர், போச்சம்பள்ளி - 6 செ.மீ
மேலும் திண்டுக்கல், தேனி, நீலகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.