Chennai weather latest updates : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை :
இந்த மலையானது நாளை மற்றும் அடுத்த இரு தினங்களுக்கு செய்துவரும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்சம் வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் நிலவி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று கனமழையை பெற்ற இடங்கள்
நேற்று திருக்கோயிலூர், செஞ்சி ஆகிய இடங்களில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது திருவண்ணாமலை போளூர் என்ற இடத்தில் 10 சென்டி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் என்ற இடத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் மற்றும் அலங்கயம் ஆகிய இடங்களில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : சென்னையில் மழை நீடிக்குமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?