Chennai weather latest updates Tamil Nadu Puducherry receives convective rainfall : இன்று தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை இன்றும் நாளையும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை :
நேற்று மதியம் முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது சென்னை. நேற்று மாலை துவங்கி, இரவு வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்னலுடன் கூடிய மழைப் பெய்தது. சென்னையில் கடந்த சனிக்கிழமைக்குப் பிறகு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கான வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று அதிகபட்ச மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
நேற்று அதிகபட்சமாக தேவாலாவில் 5 செ.மீ மழை பதிவாகியது. கோவையின் சின்னக்கல்லாறு பகுதியில் 3 செ.மீ மழையும், வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவானது.
பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 93.91 அடியாக உள்ளது. நீர் இருப்பு 24.2 டி.எம்.சி. நீர்வரத்து 3846 கனஅடி, வெளியேற்றம் 3650 கனஅடி ஆகும்.
மேலும் படிக்க : தென் தமிழகத்தில் கனமழை