அடுத்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை : அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும்

Chennai weather latest updates Tamil Nadu Puducherry weather forecast
Chennai weather latest updates Tamil Nadu Puducherry weather forecast

Chennai weather latest updates Tamil Nadu Puducherry weather forecast :  தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசனாது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காஞ்சி, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை

சென்னையில் நேற்று நள்ளிரவு துவங்கி இன்று காலை வரை பரவலாக நிறைய இடங்களில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இன்று சென்னை மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : இன்றும் மழை தொடரும்! அப்பாடா இது போதுமே.

நேற்று அதிக மழைப் பொழிவை பெற்ற இடங்கள்

பூந்தமல்லி, தரமணி, அண்ணா பல்கலைக்கழக வளாகம் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை, சோழவரம், தாமரைப்பாக்கம். திருவள்ளூர் பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

டி.ஜி.பி. அலுவலகம், பொன்னேரி, தேவாலா (நீலகிரி), மானாமதுரை (சிவகங்கை), திருவாலங்காடு (திருவள்ளூர்), கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி, கோவை, வேலூர், காஞ்சி என பரவலாக தமிழகம் முழுவதும் பல பகுதிகள் நேற்று நல்ல மழைப் பொழிவை பெற்றுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai weather latest updates tamil nadu puducherry weather forecast light to moderate rain in next 24 hours

Next Story
இதுக்கே 4 அடி உசந்துருக்குன்னா… எல்லாரும் பண்ணியிருந்தா சென்னையே சொர்க்க பூமிதான்!chennai, chennai corporation, chennai rain , rain water harvest, ground water level, corporation commissioner
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X