/tamil-ie/media/media_files/uploads/2019/09/rr.jpg)
weather Chennai news live Chennai weather forecast Tamil Nadu heavy rain details, சென்னை வானிலை அறிக்கை
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இயங்கி வரும் மண்டல வானிலை ஆய்வு மையம் செப்டம்பர் 14ம் தேதி இரவு 9 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருச்சி, சேலம், விழுப்புரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவுநேரங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.