Chennai weather latest updates tamil nadu rainfall records : இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டமாக காணப்படும். நேற்று மாலையில் இருந்து தென்சென்னையில் பல இடங்களிலும், வட சென்னையிலும் கனத்தமழை பெய்தது. திருவான்மியூர், பெசண்ட் நகர் இடங்களில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை…
நேற்று சென்னையில் பதிவான மழையின் அளவு
நேற்று சென்னையில் பெய்த மழையின் அளவை சென்னை வெதர்மேன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவின் படி நேற்று சென்னையில் பதிவான மழையின் அளவு
தாம்பரம் தாலுக்கா அலுவலகம் - 18
மீனம்பாக்கம் - 17
ஆலந்தூர் - 17
அண்ணா பல்கலைக்கழகம் (கிண்டி) - 15
தரமணி - 15
இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (கேளம்பாக்கம்) - 14
காட்டான்குளத்தூர் - 9
காட்டுப்பாக்கம் - 7
சோழிங்கநல்லூர் - 5
திருத்தணி - 5
சத்யபாமா பல்கலைக்கழகம் - 5
திருப்போரூர் - 5
மதுராந்தகம் - 5
(அளவீடுகள் mm-இல்)
முழு கொள்ளளவை எட்டும் வீராணம் ஏரி
மேட்டூர் அணையில் இருந்து கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து திறந்தப்பட்டு வருகின்ற நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 புள்ளி 75 அடியாக உயர்ந்துள்ளது. அந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47 புள்ளி 50 அடியாகும்.