Chennai weather latest updates thundershower is likely to occur : தேனி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தங்களின் அறிக்கையில் அறிவித்துள்ளது.
Chennai weather latest updates thundershower : சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.
அதிக அளவு மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
பெரம்பலூர் - 8 செமீ மழை பதிவாகியுள்ளது
வால்பாறை - 7 செ.மீ மழை
சின்னக்கல்லாறு, பெரியாறு - 6 செ.மீ மழை
வால்பாறை தாலுகா அலுவலகம் - 5 செ.மீ மழை
ஜி.பஜார் (நீலகிரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை), தேவலா (நீலகிரி), தேக்கடி (தேனி), சீர்காழி (நாகை) - 4 செ.மீ
வெண்பாவூர் (பெரம்பலூர்), பரமக்குடி (ராமநாதபுரம்), நடுவட்டம் (நீலகிரி) - 3 செ.மீ மழை
Kerala Flood : கேரள வெள்ளம்
கேரளாவில் 8 மாவட்டங்களில் நேற்றும் கனமழை பெய்துள்ளது. மலப்புரம் மற்றும் வயநாட்டினை சேர்ந்த 90க்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் சிக்கியும் மாண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அம்மாநில மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க : கேரள மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் : முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டுவிட்..
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட்
இரண்டு நாட்களாக சென்னையில் மாலையில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு வெதெர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பின் படி இன்று காலை 08:30 மணி வரையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதிவான மழை
திருத்தணி - 107mm
தாமரைப்பாக்கம் - 67
திருவாலங்காடு - 59
சோழவரம் ஏரி - 58
அரக்கோணம் - 57
செங்குன்றம் ஏரி - 37
பூண்டி ஏரி - 26
மாதவரம் - 26
செம்பரம்பாக்கம் - 19
பொன்னேரி - 18
பாரீஸ் கார்னர் - 14
தண்டையார் பேட்டை - 14
அம்பத்தூர் - 12
பெரம்பூர் - 12
நுங்கம்பாக்கம் - 12
அயனாவரம் - 11
மெரினா - 11
சோழிங்கநல்லூர் - 11
திருவள்ளூர் - 10
கும்மிடிப்பூண்டி - 10
பூந்தமல்லி - 10
கொரட்டூர் அணைக்கட்டு - 10
கிண்டி - 10
அளவீடுகள் அனைத்தும் mm கணக்கில்