சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி காரைக்கால் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று மழை :
இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘வங்க கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி , காரைக்கால் மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும்.
குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கடலோர பகுதிகளில் கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்திருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தளவில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக் கூடும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.