Chennai weather news, IMD Chennai forecast, schools holiday announced: கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளுர், கடலூர், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக தொடர் மழை பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருக்கிறது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இதே போல, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் வெளியிட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோன்று காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, கடலூர், ராமநாதபுரம், புதுச்சேரியிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், தொடர் கனமழைகாரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை (டிசம்பர் 2) நடைபெற இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்.
இதே போல, அண்ணா பல்கலைகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், 4 வளாகங்களின் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி அறிவித்துள்ளார்.