Chennai Weather News In Tamil: மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையத்தின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடலோர ஆந்திரா பகுதியில் இடி, மின்னல் உடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி,மீ. வேகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் மதுரை, கோவை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ என்ற வேகத்தில் இருக்கும்.
chennai weather news and Fresh Alerts For Fishermen: வானிலை இன்று
கடலோர ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் அனல்காற்று வீசக்கூடும். மக்கள், 10ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நேரடி சூரியனின் பார்வையில் இருந்து காத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
10ம் தேதி இரவு 11.30 மணிவரை கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்படும். அலைகள் 2 மீ உயரத்திற்கு எழும்பும் வாய்பபு உள்ளதால், தென் தமிழக கடேலார பகுதி மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழைப்பதிவு ( 10ம் தேதி காலை 8.30 மணிநிலவரப்படி)
சேலம் மாவட்டம் கெங்கவல்லி, வீரகனூர் - 5 செ.மீ
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் - 4 செ.மீ
லக்கூர், வேப்பூர், ஊட்டி - 3 செ.மீ
ஊத்தங்கரை, பஞ்சப்பட்டி, திருச்செங்கோடு, நத்தம் - 2 செ.மீ
தர்மபுரி, போச்சம்பள்ளி, துறையூர், தம்மம்பட்டி, வாழப்பாடி, மாயனூர், திருமயம், உசிலம்பட்டி, திருத்தணி - 1 செ.மீ என்றளவில் மழை பதிவாகியுள்ளது.