Chennai Weather News In Tamil: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கன மழைக்கான வாய்ப்பு? சென்னையில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவல்கள் இங்கே:
Latest- 8 மாவட்டங்கள்... கொட்டுது மழை: வானிலை அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 15) பகல் 12.30 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறியிருக்கும் தகவல்கள் வருமாறு:
Weather News Today: வானிலை அறிக்கை
தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று கன மழை பெய்யும். குறிப்பாக வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு இருக்கிறது.
நாளை (நவம்பர் 16) தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுவையின் சில பகுதிகள், உள் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும். நவம்பர் 17 முதல் 19 வரை தமிழகம் மற்றும் புதுவையின் குறிப்பிட்ட பகுதிகளில் அதேபோல லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் இடி மின்னல் இருக்கும்.
சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரியாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு இருக்கும். இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.