இந்த 11 மாவட்டங்களில் இன்று கன மழை! வானிலை அப்டேட்

Chennai Weather: சென்னையில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவல்கள் இங்கே:

Chennai Weather: சென்னையில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவல்கள் இங்கே:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Weather News In Tamil, Weather News, Weather News Today, வானிலை அறிக்கை, இன்றைய வானிலை

Chennai Weather News In Tamil, Weather News, Weather News Today, வானிலை அறிக்கை, இன்றைய வானிலை

Chennai Weather News In Tamil: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கன மழைக்கான வாய்ப்பு? சென்னையில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவல்கள் இங்கே:

Advertisment

Latest- 8 மாவட்டங்கள்... கொட்டுது மழை: வானிலை அறிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 15) பகல் 12.30 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறியிருக்கும் தகவல்கள் வருமாறு:

Weather News Today: வானிலை அறிக்கை

Advertisment
Advertisements

தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று கன மழை பெய்யும். குறிப்பாக வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு இருக்கிறது.

நாளை (நவம்பர் 16) தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுவையின் சில பகுதிகள், உள் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும். நவம்பர் 17 முதல் 19 வரை தமிழகம் மற்றும் புதுவையின் குறிப்பிட்ட பகுதிகளில் அதேபோல லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் இடி மின்னல் இருக்கும்.

சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரியாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு இருக்கும். இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

 

Tamilnadu Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: