Chennai Weather News In Tamil: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (6-ம் தேதி) இரவு 10 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் 10-ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
கோவை, நீலகிரி மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. இன்றும் (7-ம் தேதி) கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
Chennai Weather Forecast: தமிழகத்தில் 10-ம் தேதி வரை மிதமான மழை
Weather Chennai: சென்னை வானிலை அறிக்கை
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டமாக இருக்கிறது. சில இடங்களில் மழை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாகவும் இருக்கும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
புயல் எச்சரிக்கை
வடமேற்கு வங்க கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனது. தென்மேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே வடகிழக்கு வங்க கடலில் ஒடிசா மாநிலம் பாலசூருக்கு 150 கி.மீட்டர் தொலைவில் உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறி ஒடிசா- மே.வங்காளம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக கடலூர், பாம்பன், தூத்துக்குடி, வ.உ.சி. துறைமுகங்களில் 1-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தமிழகத்திற்கு இந்தப் புயல்களால் பாதிப்பு இல்லை.