Tamil nadu weatherman post today on weather in chennai: டெல்டா மக்களுக்கு ஒரு சந்தோஷ செய்தியாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்திருக்கிறது. இன்னும் 9-ம் தேதி டமால்... டுமீல் காத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.
தமிழகம் மழைக்காக ஏங்கி நிற்கிறது. சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. காவிரி பாசன விவசாயத்திற்கு இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. மழை பெய்தால் மட்டுமே காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும் என கர்நாடகா கூறி வருகிறது.
இந்தச் சூழலில் தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருக்கும் தகவல்கள் வருமாறு: ‘தலக்காவிரி பகுதியான குடகு நீர்ப்பிடிப்பு பகுதியில் முதல் முறையாக நல்ல மழை பெய்திருக்கிறது. குடகு பகுதியில் 147 மிமீ மழை பெய்திருக்கிறது. கேரளா மாநிலம் வயநாடு பூகோட் பகுதி 189 மிமீ மழை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டின் நீலகிரி, வால்பாறை பகுதியிலும் 100 மிமீ-க்கு மேல் நல்ல மழை பெய்திருக்கிறது.
Chennai weather forecast: தமிழ்நாடு வெதர்மேன்
Chennai weather news in tamil: இன்றைய வானிலை
குடகு பகுதியில் பெய்திருக்கும் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். அதேபோல சிக்மகளூர் நீர்பிடிப்பு பகுதியில் பெய்திருக்கும் மழை காரணமாக ஹேமாவதி அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். கேரளாவின் வயநாடு பகுதி நீர்ப்பிடிப்பு பகுதி மழை காரணமாக கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும்.
Tamil Nadu Weather Updates: தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம்
கன்னியாகுமரி மாவட்டம், தேனி முல்லைப் பெரியாறு பகுதியிலும் மழை பதிவாகியிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை 8-ம் தேதி மழையை எதிர்பார்க்கலாம். எனினும் டமா.. டுமீல் (இடி-மின்னல்) காட்சிகளை ஜூலை 9-ம் தேதி காண்போம். எனவே தமிழகத்திற்கு சிறப்பான நாட்கள் காத்திருக்கின்றன. தமிழகத்தின் மலைப் பகுதிகள், கடற்கரையோர பகுதிகள் ஆகிய இரண்டுமே மழை பெற இருக்கின்றன’ என கூறியிருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.