Northeast Monsoon 2019 Forcast Updates : தமிழகத்தை எச்சரிக்கும் கனமழை – வானிலை மையம்

Chennai Weather Today News : அதிகபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும்.

Tamil Nadu news today live updates

Northeast Monsoon Chennai 2019:   திருவள்ளூர், காஞ்சி, சென்னை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, மதுரை, திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்துள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

மேலும் படிக்க : Northeast Monsoon 2019: தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை – வானிலை மையம்

 

Live Blog

Chennai weather Northeast monsoon 2019 updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை குறித்த அப்டேட்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

13:38 (IST)18 Oct 2019
21, 22 தேதிகளில் தமிழகத்துக்கு கனமான மழை:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டி தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று சென்னை வானிலை மையம் தெரிவித்த அறிக்கையில், வரும் 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.  மேலும், வெப்பச்சலனம் காரணமாக  தமிழகம், புதுச்சேரியில் வரும் 20ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

10:05 (IST)18 Oct 2019
கன்னியாகுமரி நிலவரம்

கொட்டாரம் பகுதியில் 127 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி 46 மி.மீ, சித்தாறு - 43 மில்லிமீட்டர், பேச்சிப்பாறை - 30 மி.மீ மழை பெய்துள்ளது.

09:21 (IST)18 Oct 2019
மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு நேற்று வரை 8,347 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. ஒரே நாளில் 26 ஆயிரம் கனஅடி நீர் அதிகமாகி தற்போது 34,722 கனஅடி வந்துகொண்டிருக்கிறது.

09:05 (IST)18 Oct 2019
குந்தா தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மஞ்சூர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் மின் கம்பங்கள் கீழே சாய்ந்தன. நேற்று நள்ளிரவு முதல் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். நிலச்சரிவு பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ளதால் மலைவாழ் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

08:57 (IST)18 Oct 2019
சதம் அடித்த தென் தமிழக மாவட்டங்கள் (2)

தூத்துக்குடி மாவட்டத்திலும் பலத்த கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.  எட்டயபுரம் - 137, விளாத்திகுளம் - 74,  தூத்துக்குடி துறைமுகம் - 57, காயல்பட்டினம் - 55, தூத்துக்குடி - 50,  கோவில்பட்டி - 49,  கயத்தாறு - 49,  திருச்செந்தூர் - 46,  ஒட்டப்பிடாரம் - 46,  மணியாச்சி - 41, சுரங்குடி - 41, கடம்பூர் - 40,  சாத்தான்குளம் - 38,  வைப்பாறு - 36,  ஸ்ரீவைகுண்டம் - 35,  கழுகுமலை - 33, கடல்குடி - 32,

08:48 (IST)18 Oct 2019
சதம் அடித்த தென் தமிழக மாவட்டங்கள் (1)

தமிழகத்தின் மிகவும் வறட்சியான மழைப்பொழிவை குறைவாக பெரும் மாவட்டங்களில் ஒன்று ராமநாதபுரம். தற்போது பெய்த கனமழையால் மக்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். இரண்டு நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) கடலாடி - 117, பரமக்குடி - 104, திருவாடனை - 85, தொண்டி - 83, ராமேஸ்வரம் - 47, தங்கச்சிமடம் - 35, முதுகுளத்தூர் - 34, ஆர்.எஸ். மங்களம் - 33, பாம்பன் - 30

08:42 (IST)18 Oct 2019
அண்ணா சாலையில் வெள்ளம்

சென்னையில் நேற்றிரவு 10 மணிக்கு பின்பு மழை பெய்யத்துவங்கி நள்ளிரவு வரை நீடித்தது. நுங்கம்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, வியாசர்பாடி, ஓட்டேரி, மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நள்ளிரவில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

08:39 (IST)18 Oct 2019
பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் - சென்னை ஆட்சியர்

சென்னையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் பள்ளிகள் அனைத்தும் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு

08:32 (IST)18 Oct 2019
100-ஐத் தொட்ட நுங்கம்பாக்கம் - Tamil Nadu weatherman updates

காஞ்சி - திருவள்ளூர் - சென்னை பெல்ட்டில் பதிவான மழையின் அளவு குறித்து பிரதீப் ஜான் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

(அளவீடுகள் மில்லிமீட்டரில்)

நுங்கம்பாக்கம் 102, எண்ணூர் 23, மாதவரம் 23, கிண்டி 18, கேளம்பாக்கம் 12, மீனம்பாக்கம் 10, செம்பரம்பாக்கம் - 3, சோழிங்கநல்லூர் 2. சென்னையில் 100 மி.மீ மழைப் பொழிவை பெற்றுள்ளது நுங்கம்பாக்கம். வருகின்ற நாட்களில் மழையின் அளவு சீராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

08:28 (IST)18 Oct 2019
பில்லூர் அணை நிலவரம்

மேட்டுப்பாளையம் அருகே அமைந்திருக்கும் பில்லூர் அணையின் நீர்மட்டம் 97.5 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 14 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக அணையின் நீர் வரத்தும், வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

08:26 (IST)18 Oct 2019
திருப்பூர் மாவட்ட நிலவரம்

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் உடுமலை அருகே இருக்கும் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு. சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனியில் பெய்த கனமழையால் நேற்று சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Chennai weather Northeast monsoon 2019 updates : தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குமரியின் கொட்டாரம், கொடைக்கானல் போட் க்ளப் பகுதிகளில் 13 செ.மீ மழையும், கடலாடியில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. பரமக்குடி மற்றும் திருவாடனை போன்ற ராமநாதபுர மாவட்ட பகுதிகளில் முறையே 10 செ.மீ, 9 செ. மீ மழை பதிவாகியுள்ளது. தொண்டியில் 8 செ.மீ மழையும், தூத்துக்குடியின் விளாத்திக்குளம், சிவகங்கையின் தேவக்கோட்டை, திருப்புவனம், காஞ்சியின் மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தேனி, தர்மபுரி, நீலகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை கொட்டியுள்ளது.

Web Title:

Chennai weather northeast monsoon 2019 live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close