தமிழகம், புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா, கர்நாடகாவின் தெற்கு உட்புற பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 17ம் தேதி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், 14ம் தேதி பிற்பகல் 01.30 மணியளவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.....
இன்று (14ம் தேதி) முதல் 18ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பலபகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை : ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று (14ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்பு
மாநிலத்தின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்பு.
பலத்த இடி குறித்த எச்சரிக்கை : மாநிலத்தின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு ஆங்காங்கே பலத்த இடி இடிக்கும், அவ்வப்போது மின்னலும் வெட்டும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மழைப்பதிவு
கொடைக்கானல் - 8 செ.மீ.
கொடைக்கானல் போட் கிளப் - 6 செ.மீ
கோத்தகிரி, ஈரோடு, குன்னூர், மேட்டூர் - 4 செ.மீ
சோழவந்தான், உசிலம்பட்டி, கேத்தி, பெரியகுளம், காங்கேயம், ஹோகனேக்கல், சத்தியமங்கலம், நாமக்கல், நத்தம், கமுதி, வாடிப்பட்டி, இளையான்குடி - 2 செ.மீ
ஊட்டி, கள்ளக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, மங்கலாபுரம், செங்கம், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.