Chennai weather Northeast monsoon : தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக ஒரு வாரத்திற்கும் தாமதமாக பெய்யத் துவங்கியது. ஜூலை முதல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கனமழை தான் எங்கும். செப்டம்பரம் இறுதி வாரம் வரை பெய்த கனமழையால் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. ஆனால் காலம் தவறி பெய்த மழையால் விவசாயப் பொருட்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. கர்நாடகாவின் வெங்காயத்தின் உற்பத்தி இயல்பைக் காட்டிலும் மிகவும் குறைந்துவிட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை, வானிலை ஆராய்ச்சி மையம் “இந்த நாளில் தான் துவங்கும்” என்று குறிப்பிட்டு கூறிய அதே அக்டோபர் 17ம் தேதி (இன்று) சிறப்பான ஆரம்பத்தை தந்துள்ளது. இன்றைய தமிழ்நாடு வானிலை குறித்த அப்டேட்களை ஆங்கிலத்தில் பெற
சென்னை வானிலை
சென்னையில் இன்று காலையில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிகாலை 04:30 மணிக்கு துவங்கிய கனமழை 06:30 வரை கொட்டித்தீர்த்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மழை இவ்வாறே தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
மேலும் படிக்க : 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்
Live Blog
Northeast monsoon : இன்று தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இன்று காலை பெய்த மழையில் சென்னை வடபழனி சாலை, கிண்டி ரயில்நிலைய மேம்பாலப்பகுதிகள், நந்தனம் சிக்னல், கோடம்பாக்கம் சாலை, அண்ணாநகர்- கோயம்பேடு சாலை, போரூர் - பூந்தமல்லி சாலை, ஜிஎஸ்டி சாலை, நுங்கம்பாக்கம் சாலை, அண்ணா சாலை என திரும்பிய பக்கம் எல்லாம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மழை தண்ணீரில் மிதந்து சென்றன.
சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. கிண்டி, சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை, புரசைவாக்கம், வியாசர்பாடி, விமான நிலையம், தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது.
தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி சென்னை சாலைகள் பயணிக்க ஏற்றதாக இல்லை. பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருந்தது. அலுவலகங்கள் மற்றும் கல்லூரி செல்லும் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
Express photo : Janardhan Kaushik
தமிழகத்தில் குறைவான மழைப்பொழிவை பெறும் இடமான ராமநாதபுரம் மாவட்டத்தை வெளுத்து வாங்கியுள்ளது கனமழை. கடந்த இரண்டு நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் அளவுகள் கீழே (அளவீடுகள் மில்லி மீட்டரில்) கடலாடி - 117, பரமக்குடி - 104, திருவாடனை - 85, தொண்டி - 82, ராமேஸ்வரம் - 47, தங்கச்சிமடம் - 35, முதுகுளத்தூர் - 34, ஆர்.எஸ். மங்களம் - 33
காஞ்சி - திருவள்ளூர் - சென்னை பெல்ட்டில் நேற்று மற்றும் நேற்று முன் தினம் என பருவமழைக்கு முன்பு பதிவான மழையின் அளவு குறித்து சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டார் தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான். அவரின் அறிக்கைப்படி (அளவீடுகள் மில்லி மீட்டரில்) பூந்தமல்லி - 61, காஞ்சி - 53 ,செம்பரம்பாக்கம் - 51, கொரட்டூர் அணைக்கட்டு - 47, மீனம்பாக்கம் - 46, கிண்டி - 45, ஆலந்தூர் - 43, கே.கே. நகர் - 38, திருவள்ளூர் - 36, ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் - 36, தாமரைப்பாக்கம் - 29, நுங்கம்பாக்கம் - 28, அம்பத்தூர் - 28, திருத்தணி - 28, சோழவரம் - 27, கும்மிடிபூண்டி - 26
நேற்று அதிகப்படியான மழைப்பொழிவை பெற்ற இடங்கள்
திருவள்ளூரின் பூந்தமல்லியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ராம்நாதபுரம் மாவட்டத்தின் பாம்பனில் 10 செ.மீ மழையும், நெல்லையின் ஆயக்குடியில் 9 செ.மீ மழையும், திருவள்ளூரின் பூண்டி, விருதுநகரின் சிவகாசி பகுதியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. திருவள்ளூரின் தாமரைப்பாக்கம், கிருஷ்ணகிரியின் போச்சம் பள்ளி, திருவள்ளூரின் செங்குன்றம் பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights