சென்னை மக்களுக்கு செம்ம வீக் எண்ட்: திங்கட்கிழமை வரை மழை இருக்கு!

வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக இருந்தாலும், வெப்பச்சலன செயல்பாடு மாலை நேரங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். 

chennai weather today weather today
chennai weather today weather today

வட தமிழகத்தின் சில பகுதிகளில் திங்கள்கிழமை வரை ஈரமான வானிலை நிலவும் என்பதால், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil News Today Live: நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம்

முந்தைய டிப்ரஷன் மகாராஷ்டிரா கடற்கரையிலிருந்து அரேபிய கடலுக்கு நகர்ந்துள்ளதால், மாநிலத்தின் சில பகுதிகள் குறிப்பாக வடக்கில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒப்பீட்டளவில் வெப்பமான நாட்களுக்குப் பிறகு, சென்னையில் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை லேசான மழை பெய்தது. நுங்கம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் மாலை 6 மணி வரை, 1 செ.மீ-க்கும் குறைவான மழையைப் பதிவு செய்தன. இத்தகைய வெப்பச்சலன செயல்பாடு இன்னும் சில நாட்களுக்கு மழையைத் தூண்டும்.

அக்டோபர் 20 வரை இதேபோன்ற வானிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரி, நாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக இருந்தாலும், வெப்பச்சலன செயல்பாடு மாலை நேரங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கேப்டன் மாற்றமும் கை கொடுக்கவில்லை: மும்பையிடம் வீழ்ந்த கொல்கத்தா

”அக்டோபர் 19-ஆம் தேதி மத்திய வங்காள விரிகுடாவில் மற்றொரு குறைந்த அழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது ஆந்திராவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அக்டோபர் 20-ம் தேதி வரை வட தமிழகத்தில் மழையை பாதிக்கலாம். இந்த வானிலை அமைப்புகள் காற்று வீசுவதை தாமதப்படுத்தியுள்ளன. அதனால் வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதிக்குள் பெய்யும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என சென்னை வனிலை மைய துணை இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai weather rain in chennai tamil nadu weather report north west monsoon

Next Story
நீட் தேர்வு: தமிழகத்தில் 57% மாணவர்கள் தேர்ச்சி!neet exam , nta.neet.nic.in, neet 2020 admit card,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com