chennai weather : டுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Chennai Weather updates:.: கனமழைக்கு எச்சரிக்கை!
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மதியம் 3 மணி முதல் காற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
சென்னையில் திருவல்லிக்கேணி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, பாரிமுனை, மிண்ட், அம்பத்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
திருவொற்றியூர், அமைந்தகரை, பெரம்பூர், ராயப்பேட்டை, மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. புழல், செங்குன்றம், ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ஐயப்பன்தாங்கல்,காட்டுப்பாக்கம், பூந்தமல்லி, ஆவடி பகுதிகளிலும் காற்று இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார்.
சென்னையை பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில், ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிவித்திருந்த நிலையில், சென்னை காசிமேடு, ஆர்.கே.நகர், வண்ணாரபேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மழைநீர் பெருக்கெடுத்தது.