Chennai weather : வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க இன்னும் சில வாரங்களே இருக்கின்ற நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்ய துவங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மந்தவெளியில் மழை பெய்து வருதாக கூறியிருக்கும் தமிழ்நாடு வெதர்மென் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சென்னை, புதுவை, திருவண்ணாமழை, தஞ்சை, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அதாவது இன்று டமால் டுமீல் ரேஞ்சுக்கு மழை இருக்கும் என்று அறிவித்துள்ளார் ப்ரதீப் ஜான். உள் தமிழக பகுதிகளில் இருந்து கடற்கரை ஓரமாக இந்த மழை ஒரு ஏவுகணை போல் வருகிறதாம்.
இந்த பகுதிகளில் நீங்கள் இருந்தால், வெளியே செல்லும் போது ரெய்ன்கோட், குடை என்று தயார் நிலையில் கிளம்புங்கள். சென்னை, ஆலந்தூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி, மந்தவெளி, ஆழ்வார் பேட்டை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் படிக்க : விடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil