Chennai Weather Report Southwest Monsoon Tamil Nadu Kerala Rainfall : மிகவும் தாமதமாக கேரளத்தில் நேற்று தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் அமைந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் அமைந்திருக்கும் மாவட்டங்களில் தொடர் கனமழையை மக்கள் எதிர்பார்க்கலாம். அங்கு கட்டப்பட்டிருக்கும் அணையில் நீர்வரத்து வரும் வாரங்களில் அதிகரித்து வரும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை :
நேற்று நள்ளிரவு வெளியான வானிலை அறிக்கையின் தகவல்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று பலத்த கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை, மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும்.
காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை வானிலை : சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
மேலும் படிக்க : சென்னைக்கு ஜூன் பிற்பகுதியில் மழை வாய்ப்பு : ஆனா, ரொம்ப எதிர்பார்க்காதீங்க, ஏமாந்துருவீங்க!!