Today Chennai weather report update : ஆங்கிலத்தில் மேங்கோ ஷவர் (Mango Shower) என்று அழைக்கப்படும், கோடையின் பருவ மழை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து, மக்களை மகிழ்வித்து வருகின்றது.
ஆனால் வடக்கு கடலோர மாவட்டங்களில் பெரிதாக மழையென்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. 22ம் தேதி நல்ல மேகமூட்டம் காணப்பட்டதோடு காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்தது. ஆனாலும் சென்னைவாசிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மேலும் படிக்க - '50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்த புயல்' - தமிழ்நாடு வெதர்மேன்
Today Chennai weather report update
கடந்த ஆண்டும் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால், சென்னை மக்கள் குடிநீருக்கு அதிக சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு நல்ல செய்தியாக வங்கக் கடலில் உயர்ந்த வடக்கு வங்கக் கடலை மையமாக கொண்டு உயர் அழுத்தமும், வடக்கு அரபிக் கடலை மையமாக வைத்து உயர் அழுத்தமும் உருவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று பகல் பொழுதில் விடுத்த எச்சரிக்கை
இது வழுவான நிலையில் இருப்பதால், இந்திய பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் ஃபனி புயல் (Cyclone Fani) இலங்கைக்கு கிழக்கு க்டலோரமாக நகர்ந்து வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரத்தில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி, 26 மற்றும் 27 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். ஏப்ரல் 28ம் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது. 29ம் தேதி புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
29 மற்றும் 30 தேதிகளில் தமிழகம் முழுக்க மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இம்முறை நிச்சயமாக மழைக்கு வாய்ப்புண்டு.
மேலும் படிக்க : Bay of Bengal: வங்கக் கடலில் புயல், 29-ம் தேதி முதல் மழை என வானிலை மையம் அறிவிப்பு