தமிழகத்தின் உட்புற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் நவம்பர் 2ம் தேதி இரவு 10 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வடதமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மழைப்பதிவு
திருவாரூர் - 3 செ.மீ
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை , தேனி மாவட்டம் உத்தமபாளையம், விழுப்புரம், திருவண்ணாமலை - 2 செ.மீ
வேலூர், திருப்பத்தூர், சேலம் மாவட்டம் ஏற்காடு, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - 1 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும். பலபகுதிகளில் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே இருக்கும்.