தமிழகத்தின் உட்புற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், 01ம் தேதி நண்பகல் 12.30 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ( அக்டோபர் 1ம் தேதி) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 5ம் தேதி வரை, தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
கனமழை எச்சரிக்கை : 04ம் தேதி, தமிழகத்தின் பலபகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.
மழைப்பதிவு
அக்டோபர் 01ம் தேதி காலை 8 மணிநிலவரப்படி பதிவான மழையளவு (செ.மீ.)
செங்கோட்டை, மயிலாடி, திருத்துறைப்பூண்டி, சேரன்மாதேவி, பாப்பிரெட்டிபட்டி, உடுமலைப்பேட்டை, ராமேஸ்வரம், கரம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தேவாலா, வாலிநோக்கம், வால்பாறை, ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், வந்தவாசி, சங்கராபுரம் பாம்பன் பகுதிகளில் 2 செ.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது.
மணிமுத்தாறு, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருமயம், போடிநாயக்கனூர், நனன்னிலம், தென்காசி, கயத்தாறு, சாத்தான்குளம், பட்டுக்கோட்டை, உத்தமபாளையம், தம்மம்பட்டி, பரமக்குடி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் 1 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.