Advertisment

12 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

weather news in tamil: சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் மேகமூட்டத்துடனேயே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai rains, rain in chennai, chennai weather, சென்னை மழை

Tamil Nadu Weather Forecast and current weather in chennai: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை நீலகிரி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (மே 11) பிற்பகல் 1 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கை வருமாறு:

சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், கோவை, மதுரை, திருப்பூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை (12-ம் தேதி) தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

weather chennai, tamil nadu, வானிலை இன்று, kodaikanal weather Tamil Nadu Weather Forecast: 12 மாவட்டங்களில் மழை

Chennai Weather News In Tamil: வானிலை இன்று

மே 13, 14, 15 தேதிகளிலும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்றும் நாளையும் மேற்படி மாவட்டங்களில் மழையுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ,வேகத்தில் காற்று வீசக்கூடும்.

Read More: Tamil Nadu Weatherman: சென்னைவாசிகளை கருகாமல் காப்பாற்றியது இதுதான்...

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் மேகமூட்டத்துடனேயே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியசிற்கும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கும்.

 

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment