Advertisment

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை... வானிலை ரிப்போர்ட் என்ன சொல்கிறது?

தொடர்ந்து விடாமல் 2 மணி நேரம் மழை பெய்தது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி

author-image
WebDesk
New Update
Tamil Nadu weather News

Tamil Nadu weather News

chennai weather today chennai rain : தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

அதிலும், சென்னையில் நேற்று (11.8.20) இரவு முழுக்க நல்ல மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்தது. தொடர்ந்து விடாமல் 2 மணி நேரம் மழை பெய்தது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இனி தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு பருவமழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் சென்னையில் 35 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை வரை நிலவ வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

chennai weather : வானிலை ரிப்போர்ட்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி,வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளிலும் லட்சத்தீவு, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நீலகிரியில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai Weather Report
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment