Chennai weather today cyclone bulbul latest updates : இன்று மட்டும் நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவக்கூடும்.
நேற்று அதிகபட்ச மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
திருப்பூர் தாலுக்கா அலுவலகத்தில் 5 செ.மீ மழை பதிவானது. சிவகங்கை, அவினாசி ஆகிய பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவானது. திருப்பூர், கன்னிமார், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவானது. வால்பாறை தாலுகா அலுவலகம், அன்னூர், நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
புல்புல் புயல் நிலவரம்
வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் புல்புல் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 08 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது ஒடிசாவுக்கு வடக்கு- வடகிழக்காக 420 கிலோ மீட்டரிலும் சாகர் தீவுகளுக்கு 560 கி.மீ தெற்கு-தென்மேற்காகவும் மையம் கொண்டிருக்கிறது. வடக்கு - வடமேற்காக அடுத்த 12 மணி நேரங்கள் நகரத்துவங்கும். நாளை காலை முதல் தீவிர புயலாக உருமாற இருக்கும் புல் புல் 10ம் தேதி காலை மேற்கு வங்கம் - வங்க கடற்கரைக்கு மத்தியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்