Chennai weather today delta districts rainfall level : தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை எச்சரிக்கை தந்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். நேற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில். திருவாரூர், காஞ்சி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை, மற்றும் சேலம் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
மழைப் பொழிவை பெற்ற இடங்கள்:
கும்பகோணம் (தஞ்சை) - 10 செ.மீ
வலங்கைமான், சீர்காழி - 7 செ.மீ
மயிலாடுதுறை (நாகை), விருதாச்சலம் (கடலூர்) - 8 செ.மீ
சிதம்பரம், வானூர், தேவக்கோட்டை, உழுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் 8 செ.மீ மழை பதிவானது. காரைக்கால் மற்றும் புதுவையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.
மேலும் படிக்க : உள் தமிழகத்தில் தொடரும் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி
அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் திறப்பு
பவானி சாகர் அணையில் தற்போது 94.32 அடி நீர் உள்ளது. நீர் இருப்பு 24.4 டி.எம்.சி. நீர் வரத்து - 3542 கன அடி, வெளியேற்றம் - 3550 கன அடி
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
kerala rains
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வருகின்ற வாரமும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் யாரும் அச்சமடையத் தேவையில்லை. ஆகஸ்ட் முதல் வாரத்தில் பெய்த அளவில் கனமழை இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.