Chennai Weather Today Forecast Southwest monsoon updates : தென்மேற்கு பருவமழை இந்த வருடம் மிகத் தாமதமாக கேரளத்தில் துவங்குவதால், தமிழகத்திலும் ஜூன் மாதம் 2 வாரத்த்தில் தான் மழை பொழியத் துவங்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று முதல் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன. கன்யாகுமரி, விருதுநகர், தேனி, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
Chennai Weather Today Forecast Southwest monsoon updates
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை. நேற்றை விட இன்று, 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் நிலவக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகும்.
நேற்று இரவு தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமூக வலைதள அறிக்கையின் படி, ஜூன் மாதம் சென்னைக்கு நிச்சயம் மழை கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் குடிநீர் தேவைகளை போக்கும் அளவிற்கு அந்த மழை இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு மழை பெய்ய வாய்ப்புகள் உண்டு.
வால்பாறை, நீலகிரி, கன்னியாகுமர், தேனி. திருநெல்வேலி போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கே இந்த தென்மேற்கு பருவமழை உதவிகரமாக இருக்கும் என்று கூறியுள்ளார். வரும் நாட்களில் வெப்பநிலை கூடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறிய அவர், திருத்தணியில் 44 டிகிரியை தாண்டியும் வெப்பம் பதிவாகக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.