Chennai weather latest updates : கியார் மற்றும் மகா என இரு புயல்கள் ஒரே நேரத்தில் அரபிக் கடலில் நிலை கொண்டிருந்தன. இதனால் தமிழகம், கர்நாடக, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்தது. மே மாதம் ஏற்பட்ட ஃபானி புயலுக்குப் பிறகு இது இந்த ஆண்டு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் கடுமையானதாக கியார் புயல் இருந்தது.
Source : tamilnadu Weatherman
ஆனால், இரு புயல்களும் ஓமன் பகுதியை நோக்கி நகர்வதால் தமிகத்திற்கு வரும் பாதிப்புகள் மிகபெரிய அளவில் தவிர்க்கப்பட்டுள்ளன. நீலகிரி, கொடைக்கானலிலும் கனமழை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 60 கன்னியாகுமரி மீனவர்கள் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்காக நடவடிக்கையும் முடிக்கிவிட்டுளது தமிழக அரசு.
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையும்
இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.