சென்னையில் கனமழை… உள்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை

Chennai weather : குறைந்தபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும் அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும்

Chennai weather today latest forecast updates heavy rain alert
Weather latest tamil news, Weather forecast chennai, Weather IMD Chennai, சென்னை வானிலை ஆய்வு மையம்

Chennai weather today latest forecast updates heavy rain alert given to interior Tamil Nadu districts  : சென்னையில் திங்கள் நள்ளிரவு பெய்த மழைக்குப் பிறகு இன்று காலையில் இருந்து பல்வேறு இடங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமானது முதல் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும் அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்தமிழகத்தில் நேற்று போல் இன்றும் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு கனமழையில் இருந்து மிக கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு : அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

நேற்று கனமழையைப் பெற்ற இடங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தின் காமாட்சிபுரம் பகுதியில் அதிகபட்சமாக 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல்லின் வேடசந்தூர் பகுதியில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தஞ்சையின் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டையின் கீரனூர் பகுதிகளில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தஞ்சை மற்றும் உளுந்தூர்பேட்டையில் 10 செ.மீ மழையும், மேட்டூர், வாழப்பாடி பகுதியில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. ராமேஸ்வரம், சேலத்தின் ஓமலூர் ஆகிய பகுதிகளில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai weather today latest forecast updates heavy rain alert given to interior tamil nadu districts

Next Story
இன்று போல என்றென்றும் மக்கள் சேவை செய்ய வேண்டும்; சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துP.Chidambaram INX Media case, P.Chidambaram in Tihar Jail, Congress senior leader P.Chidambaram,ப.சிதம்பரம், பிரதமர் மோடி, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு, P.Chidambaram receiving birthday wishes letter from PM Modi, PM Modi birthday wishes letter
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com