இன்றைய வானிலை : வட தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்

Chennai weather today : அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸூம் குறைந்த வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸூம் பதிவாகும்

Chennai weather latest updates, Chennai weather today latest updates southwest monsoon heavy rainfall alerts
Chennai weather latest updates

Chennai weather today latest updates southwest monsoon heavy rainfall alerts  : பருவமழையின் தீவிரத்தை நாம் இப்போது சரியாக உணரத்தொடங்கியுள்ளோம். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கடந்த வாரம் முதலே மிதமான மழை பொழிந்து வருகிறது. இன்று வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுவையின் சில இடங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

இன்று நீலகிரி, கோவை, தேனி, மற்றும்  திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.  அதேபோன்று வட தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் உண்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.  அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸூம் குறைந்த வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸூம் பதிவாகும்.

நேற்று அதிகபட்ச மழைப் பொழிவை பெற்ற இடங்கள்

நீலகிரியின் தேவலா பகுதியில் 7 சென்டிமீட்டர் மழை நேற்று பதிவாகியுள்ளது.  காஞ்சி மாவட்டத்தின் தாம்பரத்தில் 5 சென்டி மீட்டர் மழையும், கோவையின் வால்பாறை மற்றும்  சின்னக்கல்லாறு ஆகிய பகுதிகள் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும்  ராமநாதபுரம், தேனி, நீலகிரி, மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது.

மேலும் படிக்க :  சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை…

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai weather today latest updates southwest monsoon heavy rainfall alerts given to north tamil nadu

Next Story
நடிகர் சங்கத் தேர்தல்: நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக வழக்கு – ஐசரி கணேஷ் ஆஜர்ishari ganesh appears chennai high court actors association election - நடிகர் சங்கத் தேர்தல்: நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக வழக்கு - ஐசர் கணேஷ் ஆஜர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com