Chennai weather today latest updates Southwest Monsoon Kerala Rains : இன்று விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
கேரளா & கர்நாடகாவில் எச்சரிக்கை
தமிழக- கேரள எல்லையில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று முதல் (18-07-2019) திங்கள்கிழமை வரை கனமழை பெய்யும் என்ற காரணத்தினால் பல்வேறு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று கர்நாடகாவின் குடகு பகுதியில் கனமழை பெய்து வரும் காரணத்தினால் அங்கு மஞ்சள் நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று குமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும், நாளை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும், நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மைய இயக்குநர் புவியரசு கூறினார்.
மேலும் படிக்க : மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல்வேறு இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் உண்டு. அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகும்.