Chennai weather today latest updates : இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று கனமழை எச்சரிக்கை பெரும் மாவட்டங்களாக திருவள்ளூர், காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை பகுதிகளை அறிவித்துள்ளது சென்னை வானிலை அறிக்கை.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல்வேறு இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் உண்டு. மாலை அல்லது இரவு மழை பெய்ய துவங்கும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸூம், குறைந்த பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸூம் பதிவாகும்.
நேற்று அதிகமான மழைப்பொழிவு பெற்ற இடங்கள்
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) 10 செ.மீ
திருவண்ணாமலை போளூர் 8 செ.மீ
காஞ்சிபுரம் சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் திருவண்ணாமலை ஆரணி 7 செ.மீ
திருவள்ளூர் திருத்தணி மற்றும் திருவாலங்காடு 6 செ.மீ
சென்னை அண்ணா யுனிவர்சிட்டி, டிஜிபி அலுவலகம், மற்றும் தாம்பரம் ஐந்து செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த மூன்று நாள் வானிலை நிலவரம் என்ன?
நாளை கன்னியாகுமார், திருநெல்வேலி, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், 19 மற்றும் 20 தேதிகளில் நீலகிரி, கோவை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தின் பலஇடங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்
12 : 30 PM நேர அறிக்கை
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அறிவித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமை பெய்யும் என்றும், கடலோர பகுதிகளில் வெப்பசலனம் மூலமாக மழை பெய்கிறது என்றும் அவர் அறிவித்துள்ளார்.