Chennai weather today latest updates Southwest Monsoon tamil nadu rains : தமிழகத்தில் நேற்று தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர் , புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. மதுரை, கோவை, கடலூர், மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும். இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவது மட்டுமல்லாமல், சென்னை நீலகிரி போன்று குளுகுளுவென இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று அதிகபட்ச மழைப்பொழிவை பெற்ற இடங்கள்
அதிகபட்சமாக நேற்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதி 4 செ.மீ மழையை பெற்றுள்ளது.
திருவாரூரில் உள்ள பாண்டவையாறு மற்றும் தஞ்சையில் உள்ள அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தஞ்சையின் வல்லம், திருவாரூரின் மதுக்கூர், புதுக்கோட்டையின் கந்தர்வகோட்டை திருவாரூரின் திருத்துறைப்பூண்டி, மற்றும் தஞ்சையின் பெரிய அணைகட்டு ஆகிய இடங்களில் 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
கிருஷ்ணகிரியின் போச்சம்பள்ளி, திருவண்ணாமலை, வேதாரண்யம், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஓரளவிற்கு நல்ல மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் படிக்க : கேரளாவை மிரட்ட காத்திருக்கும் தென்மேற்கு பருவமழை… மலையாள தேசம் செல்பவர்கள் பொறுமை காக்கவும்!