Chennai Weather Updates: வடதமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி; நவ. 16 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Chennai Today Weather Live Updates: சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இன்று (நவ.13) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chennai Today Weather Live Updates: சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இன்று (நவ.13) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rain in chennai xy

Chennai Weather Live

Chennai Weather Forecast News Live Updates: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகரத் தொடங்கியது. சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு இன்று (நவ.13) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisment

சென்னையில் 2-வது நாளாக இரவில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்தது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருவாய் மற்றும் பேரிடர் துறை கடிதம் எழுதியது. 

காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவுகிறது. 

ஆங்கிலத்தில் படிக்க:   Tamil Nadu Chennai Rains, Weather Today LIVE Updates

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Nov 13, 2024 15:21 IST

    வடதமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி; நவ. 16 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    வடதமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்தாலும் அது வலுவடையாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு இழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும் இதனால் தமிழ்நாட்டில் வரும் 16ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Nov 13, 2024 14:18 IST

    மாலை 4 மணிவரை மழைக்கு வாய்ப்பு

    9 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Nov 13, 2024 14:00 IST

    12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

    இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 13, 2024 12:20 IST

    "வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி"

    வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து வருவதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் தவிர்த்து மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் அதிகாலை வரை மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 13, 2024 11:58 IST

    "வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவு"

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 2 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பை விட 1 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 13, 2024 10:36 IST

    விழுப்புரத்தில் மழை இருப்பினும் பள்ளிகள் விடுமுறை இல்லை

    விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்தாலும் அனைத்து பள்ளிகள் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தவர். அதனால் பொதுமக்கள் மழையிலும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 



  • Nov 13, 2024 10:34 IST

    பகல் 1 மணி வரை மழை

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Nov 13, 2024 10:03 IST

    காரைக்கால் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

    கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு விடுமுறை இல்லை. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என கல்வி துறை இயக்குனர் பிரியதர்சினி தெரிவித்துள்ளார். 



  • Nov 13, 2024 09:09 IST

    16ஆம் தேதி வரை கனமழை

    16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவுகிறது எனவும் கூறியுள்ளது.



  • Nov 13, 2024 09:08 IST

    செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது

    ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 1812 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. மழையின் காரணமாக 100 கன அடி நீரும், கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக 315 கன அடி நீர் என மொத்தமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 415 கன அடி நீர் வரத்துள்ளது.



  • Nov 13, 2024 08:20 IST

    தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும்

    தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் மழை தொடரும் என தனியார் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.



  • Nov 13, 2024 07:55 IST

    மஞ்சள் எச்சரிக்கை

    சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

    அடுத்த 2 நாட்களுக்கு வட கடலோரப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தமிழகத்தின் தெற்குப் பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், ஆகிய இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

     



  • Nov 13, 2024 07:39 IST

    சென்னையில் 2-வது நாளாக இரவில் மழை

    சென்னையில் 2-வது நாளாக இரவில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்தது. கோயம்பேடு, மதுரவாயல், புரசவைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதேபோல், சென்னை புறநகரான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் இரவில் மழை பெய்தது. 



  • Nov 12, 2024 17:29 IST

    சென்னையில் நிவாரண மையங்கள் தயார்!

    சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மழைநீர் தேங்கினால், மழை நீரை அகற்ற சக்டி வாய்ந்த மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில், நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. செனனியில் எந்த பகுதியிலும் பெரிதாக மழை நீர் தேங்கவில்லை. சென்னையில் ஒரு சுரங்கப்பாதை தவிர மீதமுள்ள 21 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் எதிலும் மழைநீர் தேங்கவில்லை. மழை முன்னெச்சரிகை நடவடிக்கையாக 22,000 மாநகராட்சி பணியாளர்கள் பணியில் உள்ளனர்.    



  • Nov 12, 2024 17:16 IST

    சென்னையில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் - உதயநிதி ஸ்டாலின்

    சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் ஒக்கியம் மதகை ஆய்வு செய்த பிறகு, துணை முதலமைச்ச்ர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி: “சென்னையில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.” என்று கூறினார்.



  • Nov 12, 2024 17:11 IST

    சென்னையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஆய்வு

    சென்னையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 



  • Nov 12, 2024 17:05 IST

    சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்யும் கனமழை - பள்ளி மாணவர்கள் அவதி

    திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ள மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி மதுரவாயில் குன்றத்தூர் மாங்காடு திருவேற்காடு செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் இன்று காலை பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.



  • Nov 12, 2024 16:12 IST

    தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் - பாலச்சந்திரன் 

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி: “தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமன மழை பெய்யும். சென்னையில் மழைப்பொழிவை பொறுத்தவரை இதே நிலை நீடிக்கும். விட்டுவிட்டு கனமழை பெய்யும். வட தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிக்கிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைய வாய்ப்பில்லை. தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம், வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட ஒரு சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது” என்று கூறினார்.



  • Nov 12, 2024 15:26 IST

    தமிழ்நாட்டை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; சென்னையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன்

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி: “காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது. இதனால், சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.



  • Nov 12, 2024 15:11 IST

    சென்னையில் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன்

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி:  “அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



  • Nov 12, 2024 15:06 IST

    சென்னை மக்கள் கனமழை தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை - வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் 

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி: “தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைய வாய்ப்பில்லை. சென்னை மக்கள் கனமழை தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.



  • Nov 12, 2024 14:57 IST

    2 நாட்கள் பெய்யும் மழையை மக்கள் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் - கே.என்.நேரு

    2 நாட்கள் பெய்யும் மழையை மக்கள் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்; மழை நல்லது, ஏரிகள் காலியாக உள்ளன என ஆவடியில் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்



  • Nov 12, 2024 14:55 IST

    சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (நவம்பர் 12) கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Nov 12, 2024 14:01 IST

    13 மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு!

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Nov 12, 2024 13:32 IST

    3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – வானிலை மையம்

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Nov 12, 2024 13:10 IST

    சென்னை மழை நிலவரம்

    கடந்த 24 மணி நேரத்தில் சென்னையின் மடிப்பாக்கத்தில் 66 மி.மீ மழை பெய்திருக்கிறது. மொத்தமாக சென்னையில் 21 இடங்களில் 15 மி.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அண்ணா நகர் மேற்கில் 15 மி.மீ, அம்பத்தூரில் 5 மி.மீ, கொளத்தூரில் 10 மி.மீ, பெரம்பூரில் 12 மி.மீ, புழல் பகுதியில் 4 மி.மீ, மாதாவரத்தில் 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை முழுவதும் சராசரியாக 25 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.



  • Nov 12, 2024 13:07 IST

    கனமழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது - உதயநிதி

    கனமழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்



  • Nov 12, 2024 12:27 IST

    விடுமுறை குறித்த முடிவு எடுப்பதில் தாமதம் ஏன்? உதயநிதி விளக்கம்

    நள்ளிரவு முதலே மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த முடிவு எடுப்பதில் சிறு தாமதம் ஏற்பட்டது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்



  • Nov 12, 2024 11:53 IST

    வேளச்சேரியில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை

    கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குளத்தில், மழைநீர் பாய்ந்தோடுகிறது. கனமழையின்போது வேளச்சேரி பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், மழைநீரைச் சேமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



  • Nov 12, 2024 11:35 IST

    6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

    ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Nov 12, 2024 11:32 IST

    நாளை காலை வரை மழை தொடரும் - பிரதீப்ஜான்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்



  • Nov 12, 2024 11:10 IST

    மழை எதிரொலி; சென்னையில் விமானங்கள் இயக்கம் தாமதம்

    சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சென்னையில் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதமாகவும், ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 30 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகிறது.



  • Nov 12, 2024 11:05 IST

    காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழகம் நோக்கி நகர்ந்தது

    தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தமிழகம் நோக்கி நகர்ந்தது



  • Nov 12, 2024 10:59 IST

    129 நிவாரண மையங்கள் தயார்

    கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. 129 நிவாரண மையங்கள், 20 உணவு தயாரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

    காலை 9.30 மணி நிலவரப்படி எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை, மழை பாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 



  • Nov 12, 2024 10:57 IST

    கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு கடிதம்

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளது.



  • Nov 12, 2024 10:55 IST

    கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஆய்வு

    சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: