தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, 3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அடுத்த 2 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையில் 2, 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஆனால் மழைக்கு வாய்ப்பில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் சூலூர், ராஜபாளையத்தில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மீனவர்கள், 4, 5 தேதிகளில் அந்தமான் கடல் பகுதிக்கும், 6,7,8 தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். டில்லி காற்று மாசு தமிழகத்தை நோக்கி வருவதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு புவியரசன் கூறினார்.
சென்னையில் காற்று மாசு அபாயம் - தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
Chennai weather latest updates : வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நேற்றிரவு பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கண மழை பெய்தது. கோவை, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. உசிலம்பட்டி கண்ணம்மாள் என்பவர் நெல் நாற்று நாடும் போது இடிதாக்கி பரிதாமாக உயிர் இழந்தார்.
இதனிடையே, வங்காள விரிகுடா கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 6க்குள் அந்தமான் அருகே அது புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அது புயலாக மாறிய பிறகு, அதன் தாக்கங்கள் பற்றிய விவரங்கள் மேலும் தெரிய வரும்.
இதனிடையே, தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், டெல்லியில் நிலைகொண்டிருக்கும் காற்று மாசு அடுத்த ஓரிரு வாரங்களில் சென்னை நோக்கி நகரும் என்று பதிவு செய்துள்ளார்.
இதனிடைய, இன்று சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.