Chennai Weather today Monsoon 2019 latest updates : தென்மேற்கு பருவமழை ஒரு சில இடங்களில் மட்டுமே தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரியில் கனமழை கொட்டி வருகிறது. ஜி. பஜாரில் நேற்று மட்டும் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதே போன்று தேவலா பகுதியில் 3 செ.மீ. மழையும், அப்பர் பவானியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அதே போன்று வால்பாறை மெய்ன் மற்றும் சோலையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவையின் சின்னக்கல்லாறு பகுதியில் 1 செ.மீ மழையும், தேனி பெரியாரில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இன்று மழைக்கான வாய்ப்புகள் உள்ள பகுதிகள்
இன்று நாகை, தஞ்சை, திருவாரூர், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, தேனி, மற்றும் திருநெல்வேலி என 9 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றைய வானிலை சற்று மேகமூட்டத்துடனேயே காணப்படும். ஆனால் மழைக்கான வாய்ப்புகள் இல்லை. அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக்கூடும்.
மேலும் படிக்க : டமால் – டுமீல் என சென்னையில் கொட்டப்போகிறது கனமழை – தமிழ்நாடு வெதர்மென்