Chennai weather latest updates : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும், சூறவாளி காற்று வீசுவதால் குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுருத்தியுள்ளது.
Advertisment
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டி தமிழகத்தில் சில நாட்களாகவே பருவ மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரையில் , வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மேக கூடங்கள் (cloud bands) இன்று சென்னை மற்றும் பாண்டிச்சேரியை நோக்கி நகர்கின்றன ( கீழே படத்தைக் காண்க ). மேலும், வங்காள விரிகுடாவில் அதிகமான மேக கூட்டங்கள் உருவாகி வருகின்றன என்று Tamilnadu Weathermen தெரிவித்துள்ளார். சென்னையில் காலை 8 மணி நிலவரப்படி 26 டிகிரி செல்சியஸாக இருந்தன. தென்மேற்கு பருவமழையின் போது கேரளாவில் அதிகாம வெள்ளம் வரக் காரணமாக இருந்தது இந்த வகையான மேகக் கோட்டங்கள் தான் . மேற்குத் தொடர்ச்சி மழை அமைப்பால் இந்த மேகக்கூட்டங்கள் பலம் அடைந்து குறைவான நேரத்தில் அதிக மழையைக் கொட்டி தீர்த்தன.
ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடும் வீடியோ :
சென்னை மற்றும் தமிழகத்தில் வரும் 22ம் தேதியில் இருந்து கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்தது. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.