Advertisment

Northeast Monsoon Forecast : கனமழைக்கு தயாராக இருங்கள் - அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

Chennai weather today: நுங்கம்பாக்கம் ஆய்வகத்தில் ஏற்கனவே கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 101 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Weather Today Chennai, Tamil Nadu Rain News, வானிலை, வானிலை அறிக்கை, இன்றைய வானிலை

Tamil nadu news today live

Chennai weather latest updates :  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை பெய்யும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

Advertisment

வங்ககடலின் தென்மேற்கு பகுதியில் தற்போது உருவாகியுள்ள  குறைந்தழுத்த தாழ்வு நிலை, நாளை ( அக்டோபர் 22 ) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  உருவாக இருக்கிறது. ஆகையால், தென்மேற்கு வங்க‌க்கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுரை செய்துள்ளது.

இந்நிலையில் , பருவ மழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி. பழனிசாமி மாவட்ட  ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்

மழை தரும் மேகக்கூட்டங்கள் ஆந்திரப்பிரதேசத்தின் காவாலி மாவட்டதில் இருந்து தமிழக டெல்டா பகுதியை நோக்கி நகர்வதால் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

publive-image

Source : சென்னையில் ஒரு மழைக்காலம்

 

சென்னை வானிலை

இதனால், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, ஈரோட், திண்டுக்கல், ராமநாதபுரம்  ஆகிய இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் ஆய்வகத்தில் ஏற்கனவே கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 101 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைத் தவிர, இன்று சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மகாராஷ்ட்ராவிலும் மழை பெய்து வருகிறது.

வீடியோ - இந்தியாவின் பருவமழை எவ்வாறு செயல்படுகிறது 

பள்ளிகள் விடுமுறை:  

வடகிழக்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment