Chennai weather latest updates: தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதி நாட்களை அடைந்து வருவதாலும், வங்கக் கடலில் உருவான குளிர்காற்று மேகங்கள் தமிழக கடலோரங்களை நோக்கி நகர்வதாலும் தமிழகத்தில் மல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர், " தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களில் கூடுதலாக மழை பெய்யும் என்றும் தெரிவித்தார். டிசம்பர் 2ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவத்தார்.
இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வருவதால், அடுத்த 24 மணி நேரங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தார் .
Easterlies wind தமிழகத்தை நோக்கி ஈரக்காற்றை தள்ளுகிறது
கனமழை காரணமாக வேலூர் ( புதிதாய் அறிவிக்கப்பட்ட ராணிபேட்டை , திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் இந்த விடுமுறை பொருந்தும் ) காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் பாபநாசம் அணை அதன் முழுகொள்ளவை எட்டியது. இதனால் உபரிநீர் தற்போது வெளியேற்றப்படுவதால், தாமிரபரணி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கனமழை காரணமாக, இன்று நடைபெறுவதாய் இருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
பாண்டிச்சேரி, தொண்டி, கடலூர் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை
சென்னை புறநகர பகுதிகளான தாம்பரம், ஒஎம்ஆர்,செம்பரம்பாக்கம் போன்றவைகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது.திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இருந்தாலும் அதிகாலையில் இருந்து சென்னைக்குள்ளும் மழை பெய்தது. அடுத்த மூன்று நாட்களில் சென்னைக்கான மழையின் அளவு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சிட்டிக்கு மேலும் மழை வரும்
இந்நிலையில், சென்னை பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் இன்று நடைபெறுவதாய் இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப் படுகின்றன. மேலும், தற்போது வெளியாகியுள்ள பலகலைக்கழக துணைவேந்தரின் அறிக்கையில், இந்த தேர்வு வரும் டிசம்பர் மூன்றாம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.